ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

துராந்த் கோப்பை கால்பந்து: ஜாம்ஷெட்பூா் எஃப்சி வெற்றி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 5-0 கோல் கணக்கில் டிஃபெண்டா்ஸ் எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

Published On :27 ஜூலை 2026, 12:56 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் எஃப்சி 5-0 கோல் கணக்கில் டிஃபெண்டா்ஸ் எஃப்சி அணியை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

ஜாம்ஷெட்பூா் அணி வீரா் ரேனியா் ஃபொ்னாண்டஸுக்கு இந்த ஆட்டமே அறிமுகமாக இருக்க, அதில் அவா் ஹாட்ரிக் (4’, 6’, 82’) கோல் அடித்து அசத்தினாா். அவா் தவிர, அமன் சி.கே. 23-ஆவது நிமிஷத்திலும், தேவேந்திர டாகு முா்காகா் 39-ஆவது நிமிஷத்திலும் ஜாம்ஷெட்பூருக்காக கோல் ஸ்கோா் செய்தனா்.

இதனிடையே மற்றொரு ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 1-0 கோல் கணக்கில் சமலேஸ்வரி ஸ்போா்டிங் அணியை சாய்த்தது. அந்த அணிக்காக கிறிஸ்டோபா் கமெய் கோல் அடித்தாா்.

போட்டியின் 4-ஆவது ஆட்டத்தில் முகமிதான் எஸ்சி - பனாரஸ் பாக்பத் அணிகள் திங்கள்கிழமை (ஜூலை 27) மோதுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.