ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரு கோல்கூட அடிக்காமல் ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால்..! எப்படி?

காலிறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற லாமின் யமால் குறித்து...

Spain's Lamine Yamal (19) controls the ball during the World Cup quarterfinal soccer match between Spain and Belgium in Inglewood, Calif., near Los Angeles, Friday, July 10, 2026. (AP Photo/Andre Penner)

பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் லாமின் யமால் - படம்: ஏபி

Published On :11 ஜூலை 2026, 5:28 pm IST

பெல்ஜியம் அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என வென்றது. இந்தப் போட்டியில் லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் திடலில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு பெல்ஜியம் - ஸ்பெயின் அணிகள் காலிறுதிப் போட்டியில் மோதின. இதில் ஸ்பெயின் அணியின் ஃபேபியன் ரூயிஸ் 30ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டலேரே 41ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார்

பின்னர், இரண்டாம் பாதியில் மைக்கல் மெரினோ 88ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து ஸ்பெயினை 2-1 என வெற்றி பெற செய்தார்.

இந்தப் போட்டியில் கோல் அடிக்காத லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. ஒரு கோல்கூட அடிக்காத இவருக்கு எப்படி ஆட்ட நாயகன் விருது வழங்கலாம் என சில ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்தப் போட்டியில் லாமின் யமால் எதிரணியின் பாக்ஸிற்குள் அதிகமுறை (12) பந்தைத் தொட்டிருந்தார். அதிகமாக 6 முறை ஷாட் அடித்திருந்தார். அதிகபட்ச டிரிபிளிங் (4) செய்திருந்தார். நீண்ட தூர பாஸ்களில் இரு முறையும் வென்றிருந்தார். 16ல் 9 முறை டூயல்ஸில் வென்றார். 4 முறை பந்தை எதிரணியிடம் இருந்து மீட்டார்.

இந்தக் காரணங்களால் லாமின் யமாலுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இதேபோல் முன்னதாகவும் லாமின் யமாலுக்கும் ரோட்ரிக்கும் ஆட்ட நாயகன் விருது இந்த உலகக் கோப்பையில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Summary

Lamine Yamal earns the Superior Player of the Match trophy without goal scoring

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.