வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

உலகக் கோப்பையை சிறுமைப்படுத்திவிட்டு ரொனால்டோ அழுதது ஏன்? முன்னாள் வீரர் கேள்வி!

உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும்போது அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ குறித்து...

News image

போட்டிக்குப் பிறகு அழுத கிறிஸ்டியானோ ரொனால்டோ. - படம்: ஏபி

Updated On :7 ஜூலை 2026, 2:53 pm IST

ஸ்பெய்னிடம் தோல்வியுற்று உலகக் கோப்பையில் இருந்து போர்ச்சுகல் அணி வெளியேறியது. போட்டிக்குப் பிறகு கிறிஸ்டியானோ ரொனால்டோ அழுதுகொண்டே வெளியேறினார்.

”உலகக் கோப்பை ஒன்றும் பெரிய தொடர் அல்ல எனக் கூறிய ரொனால்டோ அழுதது ஏன் என எனக்குத் தெரியவில்லை” என முன்னாள் வீரர் ஜலடான் இப்ரஹிமோவிச் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றிரவு நடந்த ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஸ்பெயின் - போர்ர்சுகல் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என வென்றது.

இந்தப் போட்டியில் ரொனால்டோ ஒரு வாய்ப்பைக்கூட உருவாக்காமல், இரண்டு முறை கோல் அடிக்கும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார். பெரும்பால நேரங்களில் ஆஃப் சைடு வரும்படி நின்றுகொண்டிருந்தார்.

போட்டி முடிந்த பிறகு கண்ணீர் மல்க ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினார். யூரோ கோப்பை போலதான் உலகக் கோப்பை என்றும் பின்னர் பேட்டியளித்தார்.

முன்னதாக, நேர்காணல் ஒன்றில், “உலகக் கோப்பை ஒன்றும் பெரியது அல்ல; 6-7 போட்டிகளில் வென்றால்தான் ஒரு அணி சிறந்த அணியா? அந்த 6-7 போட்டிகளில் கோல் அடித்தால்தான் ஒருவர் சிறந்தவாராக முடியுமா?” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் கால்பந்து வீரரும் வர்ணனையாளருமான ஜலடான் இப்ரஹிமோவிச், “வெறுமனே 6-7 போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியுற்றதுக்கு எதற்காக ரொனால்டோ அழுகிறார் எனத் தெரியவில்லை...” எனக் கூறினார். இது ரொனால்டோ ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

Summary

Why cry after belittling the World Cup? Former player questions!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.