கால்பந்து உலகக் கோப்பை 2026-ல் இதுவரை ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காத அணிகளாக ஸ்பெயின், மெக்சிகோ நாட்டைச் சேர்ந்த தேசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இதுவரை 3 லீக் சுற்றுப் போட்டிகள், ஒரு நாக் அவுட் சுற்றுப்போட்டி என நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், நான்கிலும் க்ளீன் ஷீட் (கோல் விட்டுக்கொடுக்காமல் இருப்பது) பெற்று அசத்தியுள்ளன.
கடந்த ஜூன் 11 முதல் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 48 அணிகள் பங்கேற்று, தற்போது 16 அணிகளாக அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஸ்பெயின் அணி குரூப் சுற்றில் 3 போட்டிகளில் 0-0, 1-0, 4-0 என்ற கோல்கள் கணக்கில் வென்றது. முதல் நாக் அவுட் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32விலும் 3-0 என வென்று அசத்தியுள்ளது. இதன் கோல்கீப்பர் உலகக் கோப்பையில் நீண்ட நேரமாக கோல் விட்டுக்கொடுக்காதவராக வரலாறு படைத்துள்ளார்.
மெக்சிகோ அணி குரூப் சுற்றில் 2-0, 1-0, 3-0 எனவும் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 2-0 எனவும் வென்று அசத்தியுள்ளன. இந்த இரண்டு அணிகள் மட்டுமே 4 போட்டிகளிலும் ஒரு கோல்கூட விட்டுக்கொடுக்காமல் 4 க்ளீன் ஷீட்டுகளைப் பெற்றுள்ளன.
மெக்சிகோ - இங்கிலாந்துடனும் ஸ்பெயின் போர்ச்சுகலுடனும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் மோதவிருக்கின்றன. இதில் க்ளீன் ஷீட்டுகளைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளன.
Solid at the back! ð
— FIFA (@FIFAcom) July 4, 2026
Mexico and Spain are the only nations not to have conceded a goal so far at @FIFAWorldCup 2026. pic.twitter.com/iEb6RQkrrx
Summary
Mexico and Spain are the only nations not to have conceded a goal so far at FIFA World Cup 2026
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

க்ளீன் ஷீட்டில் ஸ்பெயின் உலக சாதனை: 609 நிமிஷங்கள் கோல் அடிக்க விடாமல் தடுத்த கோல்கீப்பர்!

உலகக் கோப்பையில் வரலாறு: 519 நிமிஷங்கள் கோல் அடிக்கவிடாமல் தடுத்த ஸ்பெயின் கோல்கீப்பர்!

40 ஆண்டுகள் கனவு நனவானது... ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய மெக்சிகோ!

ஃபிஃபா உலகக் கோப்பை: முதல் அணியாக அடுத்த சுற்றுக்குத் தேர்வான மெக்சிகோ!
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





