ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லூக்கா மோட்ரிச் கால்பந்தின் ஜாம்பவான்..! குரோஷியாவின் கேப்டனுக்கு ரொனால்டோ புகழாரம்!

குரோஷியாவின் கேப்டன் லூக்கா மோட்ரிச் குறித்து போர்ச்சுகலின் கேப்டன் ரொனால்டோ கூறியிருப்பதாவது...

Croatia's Luka Modric (10) and Portugal's Cristiano Ronaldo (7) embrace after the World Cup round of 32 soccer match between Portugal and Croatia in Toronto, Thursday, July 2, 2026. (Nathan Denette/The Canadian Press via AP)

லூக்கா மோட்ரிச், ஆறுதல் படுத்தும் ரொனால்டோ! - படம்: ஏபி

Published On :3 ஜூலை 2026, 1:27 pm IST

குரோஷியாவின் கேப்டன் லூக்கா மோட்ரிச்சை ”கால்பந்தின் ஜாம்பவான்” என போர்ச்சுகலின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார்.

கால்பந்து உலகக் கோப்பையின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் போர்ச்சுகல் அணி குரோஷியாவை 2-1 என வீழ்த்தியது. இந்தப் போட்டியில் கடைசி நிமிஷத்தில் விஏஆர் தீர்ப்பினால் குரோஷியாவின் கோல் மறுக்கப்பட்டது சர்ச்சையானது.

லுக்கா மோட்ரிச் (40 வயது) மற்றும் ரொனால்டோ (41 வயது) இருவருமே ரியல் மாட்ரிட் அணிக்காக பல ஆண்டுகள் ஒன்றாக விளையாடி இருக்கிறார்கள். இதுவரை 233 முறை இருவரும் ஒரே களத்தில் விளையாடி இருக்கிறார்கள். இதில் 222 முறை ஒரே அணியினராகவும் 11 முறை எதிரணியினராகவும் விளையாடியுள்ளார்கள்.

கனடாவில் இன்று அதிகாலை நடந்த இந்தப் போட்டிதான் இருவரும் ஒன்றாக விளையாடும் கடைசி போட்டியாக இருக்குமென ரசிகர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

போட்டிக்குப் பிறகு களத்திலேயே லூக்கா மோட்ரிச்சைக் கட்டியணைத்த ரொனால்டோ ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டியளித்தபோது கூறியிருப்பதாவது:

நான் லூக்காவுடன் பல ஆண்டுகள் விளையாடியிருக்கிறேன். நாங்கள் ஒத்த வயதினர். அவர் கால்பந்தின் ஜாம்பவான் என நினைக்கிறேன். அவர் இப்போதும் லெஜண்டாகவே இருக்கிறார் என்றார்.

Summary

Legend Of Football: Ronaldo Praises Modric After What Likely Is His Final World Cup

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.