ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

72 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றி: அல்ஜீரியாவை வென்று ஸ்விட்சர்லாந்து சாதனை!

உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றில் வென்ற ஸ்விட்சர்லாந்து அணி குறித்து...

Swiss players rejoicing after scoring a goal.

கோல் அடித்த மகிழ்ச்சியில் ஸ்விட்சர்லாந்து வீரர்கள். - படம்: எக்ஸ் / ஃபிஃபா உலகக் கோப்பை.

Published On :3 ஜூலை 2026, 12:07 pm IST

கால்பந்து உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணி அல்ஜீரியாவை 2-0 என வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

உலகக் கோப்பையில் ஸ்விட்சர்லாந்து அணி 1954க்குப் பிறகு முதல்முறையாக நாக் அவுட் சுற்றில் வென்று வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வான்கூவரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ப்ரீல் எம்போலோ 10ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். முதல்பாதி 1-0 என ஸ்விட்சர்லாந்து முன்னிலை வகித்தது.

பின்னர், இரண்டாம் பாதியின் முதல் நிமிஷத்திலேயே (46’) ஸ்விட்சர்லாந்தின் டான் டோயே கோல் அடித்து 2-0 என முன்னிலைப் பெற வைத்தார்.

இறுதிவரைக்கும் அல்ஜீரியா அணியினால் ஸ்விட்சர்லாந்தின் டிஃபெண்டர்களைத் தாண்டி கோல் அடிக்க முடியாமலே முடிந்தது. ஸ்விட்சர்லாந்து அணி 72 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது.

1938 முதலே நாக் அவுட் சுற்றில் வெல்லாத ஸ்விட்சர்லாந்து அணி 1954ல் பிளே ஆஃப் மூலமாக காலிறுதிக்கு முன்னேறியிருந்தது. 1954 போட்டி இல்லாமல் பார்த்தால் 88 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

Embolo, Ndoye score as Switzerland moves on at the World Cup with a 2-0 win over Algeria

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.