ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கோல் - ரெட் கார்டு வரலாற்றில் இடம்பிடித்த பலோகன்..! போஸ்னியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது அமெரிக்கா!

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் வெற்றி பெற்ற அமெரிக்கா குறித்து...

United States' Malik Tillman (17) celebrates with teammates after scoring on a free kick during the World Cup round of 32 soccer match between the United States and Bosnia in Santa Clara, Calif., near San Francisco, Wednesday, July 1, 2026. (AP Photo/Martin Meissner)

ரெட் கார்டினால் வெளியேறிய பலோகன், இரண்டாம் கோல் அடித்த மகிழ்ச்சியில் அமெரிக்க வீரர்கள். - படங்கள்: ஏபி

Published On :2 ஜூலை 2026, 12:03 pm IST

கால்பந்து உலகக் கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அமெரிக்க அணி போஸ்னியா - ஹெர்சகோவினா அணியை 2-0 என வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் கோல் அடித்த அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனுக்கு அடுத்த சில நிமிஷங்களில் ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இருந்தும் 10 பேர்களுடன் விளையாடி அமெரிக்கா வென்றது.

கலிஃபோர்னியாவில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 45ஆவது நிமிஷத்தில் அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகன் கோல் அடித்தார்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் போல்கன் என்பிஏ லெப்டோன் ஜேம்ஸ் பாணியில் கொண்டாடினார். இதுபோல் இரண்டு முறை செய்தார். முதல்முறை அவர் அடித்த கோல் ஆப்ஃசைடாகியது. பின்னர், 64ஆவது நிமிஷத்தில் எதிரணி வீரரை கீழே தள்ளியதற்காக அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

இரண்டாம் பாதியில் 10 பேருடன் விளையாடிய அமெரிக்க அணி பல கோல்களை அடித்தும் ஆஃப்சைடு விதியினால் மறுக்கப்பட்டது. பின்னர், 82ஆவது நிமிஷத்தில் மாலிக் டில்மன் கோல் அடித்து 2-0 என அமெரிக்காவை வெல்ல உதவினார்.

உலகக் கோப்பையில் கோல் அடித்து பின்னர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டவர்களில் அமெரிக்க வீரர் போல்கன் மூன்றாவது நபராக இணைந்துள்ளார்.

முன்னதாக பிரேசிலின் ரொனால்டிங்கோ 2002 காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகவும், அடுத்து பிரான்ஸின் ஜிடானே 2006ல் இத்தாலிக்கு எதிராக இறுதிப் போட்டியிலும் இப்படி நடந்திருக்கிறது.

Summary

Balogun gets US''s go-ahead goal against Bosnia and then red card

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.