ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எங்களை விட பிரான்ஸ் சிறந்த அணி கிடையாது: லாமின் யமால்

ஸ்பெயினின் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால் அளித்த சர்ச்சையான போட்டி குறித்து...

Spain's Lamine Yamal attends a training session in Guadalajara, Mexico, Thursday, June 25, 2026, ahead of the World Cup soccer match against Uruguay. (AP Photo/Refugio Ruiz)

லாமின் யமால் - படம்: ஏபி

Published On :1 ஜூலை 2026, 8:41 pm IST

ஸ்பெயினின் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால், “பிரான்ஸ் ஒன்றும் எங்களை விடச் சிறந்ததாக இருக்க முடியாது” எனக் கூறியது கால்பந்து உலகில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று பிரான்ஸ் அணி 3-0 என ஸ்வீடனை வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் அனைத்து அணிகளும் பயப்படும் அணியாகவே பிரான்ஸ் இருந்து வருகிறது.

இந்த நிலையில், ஸ்பெயினின் இளம் நட்சத்திர கால்பந்து வீரர் லாமின் யமால் எல் பார்டிடாஜோ டீ கோப் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

யூரோஸ் போட்டிகளில் இருந்தே பிரான்ஸ் எங்களை வீழ்த்தியதில்லை. அவர்களால் எங்களை விட சிறப்பானவர்களாக இருக்க முடிந்ததில்லை. குரூப் சுற்று ஆட்டங்கள் அர்த்தமற்றவை. அதில் எந்த அணிகளும் சிறப்பானவை அல்ல என நினைக்கிறேன்.

நிச்சயமாக, பிரான்ஸ் உயர்தரத்துடன் நல்ல ஃபார்மில் இந்த உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நல்ல வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அனைவரையும் விட உயர்ந்தவர் என நான் நினைக்கவில்லை என்றார்.

ஸ்பெயின் தனது முதல் போட்டியில் கேப் வெர்டே உடன் 0-0 என முடித்தது. அடுத்த போட்டியில் 4-0 என சௌதி அரேபியாவை வென்றது. உருகுவே இடமும் போராடி 1-0 என வென்றது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஆஸ்திரியாவை எதிர்கொள்கிறது.

இந்த உலகக் கோப்பையில் லாமின் யமால் முழுமையான உடல் நலத்துடன் இல்லை. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் முழுமையாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் அரையிறுதியில் மோத வாய்ப்பிருக்கின்றது. அப்படி வந்தால், லாமின் யமால் கூறியது உண்மையா பொய்யா என்பது உலகத்துக்கு நிரூபிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

Summary

FIFA World Cup 2026: "France can't be better than us," says Spain's Lamine Yamal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.