ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள்: உலக சாதனை படைத்த பிரான்ஸ் பயிற்சியாளர்!

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் நிகழ்த்தியுள்ள உலக சாதனை குறித்து...

France head coach Didier Deschamps reacts during the World Cup round of 32 soccer match between France and Sweden in East Rutherford, N.J., near New York, Tuesday, June 30, 2026. (AP Photo/Seth Wenig)

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர். - படம்: ஏபி

Published On :1 ஜூலை 2026, 5:49 pm IST

கால்பந்து உலகக் கோப்பையில் பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் திதியர் தேஷாம்ப்ஸ் (57 வயது) அதிக வெற்றிகள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஸ்வீடனுக்கு எதிராக இன்று விளையாடிய பிரான்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் பிரான்ஸ் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

பிரான்ஸில் பிறந்த திதியர் தேஷாம்ப்ஸ் அந்த அணிக்கு கடந்த 2012 முதல் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். 2014 உலகக் கோப்பையில் காலிறுதிவரை பிரான்ஸ் முன்னேறியது. 2016ல் யூரோ இறுதிக்கு முன்னேறியது.

இவரது தலைமையில் 2018 உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றது. 2022 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் தோல்வியுற்றது.

தற்போது, ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த முறையும் இறுதிக்கு முன்னேறுமென பலரும் நம்புகிறார்கள். இவரது தலைமையில் மிகவும் பலம் வாய்ந்த அணியாக பிரான்ஸ் உருவெடுத்துள்ளது.

ஸ்வீடனுடன் வென்ற பிறகு 18 வெற்றிகளுடன் பிரான்ஸ் தலைமைப் பயிற்சியாளர், உலகக் கோப்பையில் அதிக வெற்றிகள் குவித்தவராக சாதனை படைத்துள்ளார். ஃபிஃபா இதற்கு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Summary

Didier Deschamps records the most wins of any Head Coach in FIFA World Cup history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.