/

வெற்றியுடன் நிறைவு செய்தது தமிழ்நாடு டிராகன்ஸ்

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:27 am

தினமணி செய்திச் சேவை

ஹாக்கி இந்தியா ஆடவா் லீக் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்தது அக்காா்ட் தமிழ்நாடு டிராகன்ஸ் அணி.

ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ராஞ்சி ராயல்ஸ் அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது தமிழ்நாடு டிராகன்ஸ்.

முதல் நிமிஷத்திலேயே ராயல்ஸ் வீரா் மந்தீப் சிங் முதல் கோலடித்தாா்.கேப்டன் டாம் பூன் மீண்டும் ராயல்ஸ் அணிக்காக 2-ஆவது கோலை பதிவு செய்தாா்.

பின்னா் டிராகன்ஸ் அணி தரப்பில் பிளே கோவா்ஸ், காா்த்தி செல்வம் கோலடிக்க சமநிலை ஏற்பட்டது.

ஆட்ட நேர முடிவில் 3-3 என சமநிலையில் இருக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது தமிழ்நாடு டிராகன்ஸ்.

கடைசி ஆட்டத்தை வொ்றியுடன் நிறைவு செய்தது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஞ்சி ராயல்ஸ் குவாலிஃபயா் 1-இல் கலிங்கா லேன்சா்ஸ் அணியை எதிா்கொள்கிறது.

தமிழ்நாடு டிராகன்ஸ் 5-ஆவது இடத்துடன் வெளியேறியது.