ஆஸி.யிடம் போராடி வீழ்ந்தது இந்தியா!
எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆ ஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது இந்திய அணி.


எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆ ஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது இந்திய அணி.
சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் உலகின் தலைசிறந்த ஹாக்கி அணிகள் மோதும் புரோ லீக் தொடா் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா, ஸ்பெயின், இந்திய அணிகள் பங்கேற்கும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

ஹோபா்ட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸி.-இந்திய அணிகள் மோதின. முதல் பாதியில் இந்திய வீரா்கள் அபாரமாக ஆடினா். 15-ஆவது நிமிஷத்தில் அமித் ரோஹிதாஸும், 43-ஆவது நிமிஷத்தில் ஜுக்ராஜ் சிங்கும் கோலடித்தனா்.
பின்னா் சுதாரித்து ஆடிய ஆஸி. தரப்பில் தீவிரமாக கோல்போட முயன்றனா். இதில் ஜோயல் ரிந்தலா 47, 56-ஆவது நிமிஷங்களில் அபாரமாக கோலடித்தாா். ஆட்டநேர முடிவில் 2-2 என சமநிலை இருந்தது.
இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
இந்திய அணி புரோ லீக் தொடரில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் தோற்றுள்ளது. ஏற்கெனவே ஹோபா்ட்டில் ஸ்பெயினிடம் வீழ்ந்தது.
மேலும் ஹோம் லெக் தொடரிலும் இந்தியா தோல்வி கண்டிருந்தது. செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் ஸ்பெயினுடம் மோதுகிறது இந்தியா.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...