/

செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தைச் சந்தித்த இன்ஸ்டா பிரபலம்..! யார் இந்த கூஃபிஜென்?

தமிழ்நாட்டின் செஸ் ஜாம்பவானைச் சந்தித்த இன்ஸ்டா பிரபலம் குறித்து...

News image
கூபிஜென் பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / கூஃபிஜென் செஸ்.
Updated On :9 பிப்ரவரி 2026, 2:49 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாட்டின் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தைச் சந்தித்த புகைப்படத்தை இன்ஸ்டா பிரபலம் கூஃபிஜென் செஸ் பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில் இன்ஸ்டாவில் வைரலான இந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார்.

தமிழகத்தில் செஸ் விளையாட்டு போட்டிகளைச் சிறப்பாக விளையாடும் பல வீரர்கள், வீராங்கனைகள் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இதுவரை 36 கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளார்கள். கடைசியாக ராகுல் விஎஸ் கிராண்ட் மாஸ்டராக உருவானார்.

யார் இந்த கூபிஜென்?

சமீபத்தில் செஸ் போட்டிகளை சமூக வலைதளத்தில் தனியாளாக இருந்துகொண்டு புகழ்பெறச் செய்தவர்தான் கூஃபிஜென் செஸ்.

இன்ஸ்டாகிராமில் 'கூஃபிஜென் செஸ்' என்ற கணக்கில் செயல்படும் இவர் மிகவும் குறுகிய காலத்தில் பிரபலம் அடைந்தார்.

இவரது நிஜமான பெயர் தெரியவில்லை. விளையாட்டில் தோற்பவர்களை நடனம் ஆட வைத்து மிகவும் புகழ்பெற்றார்.

கூபிஜென் உடன் பிரதீப் ரங்கநாதன். எடிட் செய்யப்பட்டது.

கூபிஜென் உடன் பிரதீப் ரங்கநாதன். எடிட் செய்யப்பட்டது.

தொடக்கத்தில் இவர் பிரதீப் ரங்கநாதன் மாதிரி இருப்பதால் மீம்ஸ்களில் பிரபலமானார்.

செஸ் போட்டிகள் மீதான வளர்ச்சி

ஊர் ஊராகச் சென்று விளையாடி வந்த இவரால் பலரும் செஸ் போட்டிகளை ஆர்வமுடன் விளையாடி வருவதும் பல கிராண்ட் மாஸ்டர்கள் இவரது விடியோவுக்கு லைக் இடுவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது, இவர் செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தை அவரது வீட்டில் சந்தித்துள்ளார்.

இருவரும் விளையாடினார்களா? அதில் யார் வென்றார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

summary

Instagram personality goofyGen Chess has shared a photo of himself meeting chess legend Viswanathan Anand in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.