
மெஸ்ஸி மேஜிக்... தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல்!
எம்எல்எஸ் தொடரில் லியோனல் மெஸ்ஸி அடித்த கோல் குறித்து...

எதிரணி வீரருக்கு உதவும் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி (39 வயது) தனது தந்தை மறைவுக்குப் பிறகு முதல் கோல் அடித்து அசத்தியுள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியும் பிலடெல்பியா யூனியன் அணியும் மோதின. இந்தப் போட்டி 2-2 என சமனில் முடிவடைந்தது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 26ஆவது நிமிஷத்தில் 12 அடி தூரத்தில் இருந்து அசத்தலான கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார். பின்னர், 58ஆவது நிமிஷத்தில் எதிரணியினர் கோல் அடித்து சமன்படுத்தினர்.
சமீபத்தில் அவரது தந்தை மறைவுக்குப் பிறகு லீக்ஸ் கோப்பையில் அந்த அணி தோல்வியுற்றது. பின்னர் எம்எல்எஸ் தொடரில் முதல் இடத்துக்கான முக்கியமான போட்டியில் நாஷ்வில் அணியிடம் தோல்வியுற்றது.
இந்தப் போட்டியில் 21ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸியின் பிரி அசிஸ்ட் மூலமாக முதல் கோல் வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் மெஸ்ஸி 13 கோல்கள், 9 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார். ஒட்டுமொத்தமாக 922 கோல்கள், 420 அசிஸ்ட்டுகளை செய்துள்ளார்.
குறிப்பாக பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிராக மட்டும் 6 போட்டிகளில் 6 கோல்கள், 4 அசிஸ்ட்டுகளை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
MAGIC from Messi as @InterMiamiCF take the lead over the Union! ðª pic.twitter.com/lJ5tpDMUIA
— Major League Soccer (@MLS) August 20, 2026
Summary
MAGIC from Messi and perfect pre assist Inter Miami plays the Union to a 2-2 draw
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







