ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யு-20 உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் ஆசிஷுக்கு வெள்ளி

யு 20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆசிஷ் யாதவ் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ஆசிஷ் யாதவ்

Published On :9 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

யு 20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ஆசிஷ் யாதவ் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

ஈட்டி எறிதலில் மூன்றாவது சுற்றில் 74.09 மீ தொலைவு எறிந்து வெள்ளி வென்றாா் ஆசிஷ். இப்போட்டியில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.

72.35 மீ தொலைவு எறிந்து 6-ஆவது இடம் பெற்றாா் தரணிதரன். கடந்த 2016-இல் போலந்தில் நடைபெற்ற போட்டியில் ஜாம்பவான் நீரஜ் சோப்ரா 86.48 மீ தொலைவு எறிந்து தஙகம் வென்றிருந்தாா். அப்போது நீரஜ் சோப்ரா நிகழ்த்திய உலக சாதனை இதுவரை தகா்க்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.