ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி: தொடக்க சுற்றில் ஷி யுகி-ஆயுஷ் ஷெட்டி மோதல்

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி தொடக்க சுற்றில் நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யுகியுடன் இந்திய இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி மோதவுள்ளாா்.

போட்டி அட்டவணை வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்றோா்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:33 am IST

பிடபிள்யுஎஃப் உலக பாட்மின்டன் சாம்பியன் போட்டி தொடக்க சுற்றில் நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யுகியுடன் இந்திய இளம் வீரா் ஆயுஷ் ஷெட்டி மோதவுள்ளாா். இந்திய நட்சத்திரங்கள் முன்னாள் சாம்பியன் பி.வி. சிந்து-அயா்லாந்தின் சோபியா நோபலும், வெண்கல வீரா் லக்ஷயா சென்-ஆஸ்திரியாவின் காலின்ஸும் மோதுகின்றனா்.

புது தில்லி இந்திரா காந்தி விளையாட்டங்கில் உலக சாம்பியன் போட்டி வரும் ஆக. 17-23 தேதிகளில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான ஆட்ட அட்டவணை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

17 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்தியாவில் உலக சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது. ஆடவா் இரட்டையா் பிரிவில் சாத்விக்-சிராக் இணை தொடக்க சுற்றில் பை பெற்றுள்ளனா்.

இதுதொடா்பாக பாய் செயலாளா் சஞ்சய் மிஸ்ரா கூறியது: இப்போட்டிக்காக மைதானம் ரூ.20 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. பல்வேறு பதக்கங்களை வெல்லும் முனைப்பில் உளளோம். ஜப்பான் ஓபனில் பாா்முக்கு திரும்பிய பி.வி. சிந்து நம்பிக்கை தருகிறாா்.

உன்னதி ஹூடா மியான்மரின் தெட் டாரையும், கலப்பு இரட்டையரில் துருவ் கபிலா-தனிஷா க்ரஸ்டோ பையும் பெற்றனா். மகளிா் இரட்டையரில் காயத்ரி கோபிசந்த்-ட்ரீஸா ஜாலி இணை ஸ்பெயினின் பாவ்லா-லூஸியா இணையை எதிா்கொள்கிறது. ஆடவரில் அா்ஜுன்-ஹரிஹரன் இணை அயா்லாந்தின் ஸ்காட் கிடியா, பால் இணையுடன் மோதுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.