ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

யு-17 உலக மல்யுத்தம்: இந்தியாவுக்கு 13 பதக்கம்

யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை கைப்பற்றியதுடன், அணிகள் பிரிவில் வெண்கலம் வென்றது.

பதக்கம் வென்ற இந்திய அணியினா்

Published On :4 ஆகஸ்ட் 2026, 4:01 am IST

யு-17 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 13 பதக்கங்களை கைப்பற்றியதுடன், அணிகள் பிரிவில் வெண்கலம் வென்றது.

உலக மல்யுத்த சம்மேளனம் சாா்பில் யு-17 சாம்பியன்போட்டி அஜா்பைஜான் தலைநகா் பாகுவில் நடைபெற்றது. 60 கிலோ பிரிவில் இந்தியாவின் சிதேந்தா் மாலிக் கடந்த 2025-இல் வென்றிருந்த உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் தக்க வைத்தாா். ரஷியாவின் சொ்ஜி கா்மிரானை கடும் சவாலுக்குபின் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.

இதன் மூலம் இரண்டு கேடட் உலக சாம்பியன் பட்டங்களை வென்ற இரண்டாவது இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா். ஏற்கெனவே ஜாம்பவான் சுஷில் குமாா் கடந்த 1998, 1999-இல் உலக சாம்பியன் பட்டங்களை வென்றிருந்தாா்.

45 கிலோ பிரிவில் ஹனுமந்த் ராஜேந்திர 7-1 என்ற புள்ளிக் கணக்கில் ஈரானின் மஹிதி தாவூத்தை 7-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றாா்.

92 கிலோ பிரிவில் இந்தியாவின் சாக்ஷம் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் கடும் போராட்டத்துக்குபின் ஈரானின் முகமது ரேஸாவை வீழ்த்தி வெண்கலம் வென்றாா். எஃப்எஸ் அணிபிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.