ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கெனவே இருவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கேப்டன் ரியான் பராக் மீதும் அபராதம் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் தொடரின்போது, திடலில் வீரர்கள் அமரும் பகுதியில் கைப்பேசி பயன்படுத்தத் தடை இருக்கும்போது, வீரர்கள் அமரும் பகுதியில் அணியின் மேலாளர் ரோமி பிந்தர் கைப்பேசி பயன்படுத்தியதாக ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதனிடையே, லக்னௌ அணிக்கு எதிரான போட்டியின்போது, ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பர்கரின் போட்டி ஊதியத்திலிருந்து 10 சதவிகிதம் அபராதமும், ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமையில் (ஏப். 28) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 16 ஆவது ஓவரில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி, இ-சிகரெட் பிடிக்கும் காட்சி நேரலையில் வெளியானது.
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக் - படம்: எக்ஸ்
ஐபிஎல் விதிகளின்படி, ஓய்வறை, திடல் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரியான் இ-சிகரெட் பயன்படுத்தியதால், போட்டி ஊதியத்திலிருந்து 25 சதவிகித அபராதமும், நிலை 1 குற்றமாகக் கருதப்பட்டு - ஒரு தகுதியிழப்புப் புள்ளியும் அளிக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவில் 'இ-சிகரெட்' பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019'படி சட்டவிரோதமானது. நாட்டில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இ-சிகரெட் தடைச் சட்டத்தின்படியும் ரியானுக்கு அபராதமோ சிறைத்தண்டனையோ வழங்கவும் வாய்ப்புகள் உள்ளன.

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
Summary
Rajasthan Royals captain Riyan Parag likely to be fined 25% of match fees for vaping inside dressing room
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


