ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விடியோ வெளியான நிலையில் அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 40 ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராஜஸ்தான் அணி வீழ்த்தியது.
இந்த போட்டியில் இரண்டாவதாக ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்த நிலையில், 16 ஆவது ஓவரில் ஓய்வறையில் இருந்த ரியான் பராக் சக வீரர்களான துருவ் ஜுரேல் மற்றும் ஜெய்ஸ்வாலுடன் பேசியபடி, இ-சிகரெட் பிடிக்கும் காட்சி நேரலையில் வெளியானது.
இந்தியாவில் 'இ-சிகரெட்' பயன்படுத்துவது 'மின்னணு சிகரெட் தடைச் சட்டம் 2019'படி சட்டவிரோதமானது. நாட்டில் இ-சிகரெட் உற்பத்தி, விற்பனை, இறக்குமதி மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஐபிஎல் விதிகளின்படி, ஓய்வறை, திடல் உள்ளிட்ட பகுதிகளில் புகைப்படிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரியான் பராக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவிகிதத்தை அபராதம் விதிப்பதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விளையாட்டைக் கடந்து ரியான் பராக் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்நிலை விதிமீறலுக்கு விதிக்கப்படும் அபராதத்தை மட்டுமே ஐபிஎல் நிர்வாகம் விதித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Summary
E-cigarette incident in the dressing room! Fine imposed on Riyan Parag!

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரியான் பராக் சம்பளத்தில் 25% 'கட்'? ராஜஸ்தான் அணிக்குத் தொடரும் அபராதங்கள்!

எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் பற்றி கவலையில்லை: ரியான் பராக்
ஐபிஎல் 2026: ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த ரியான் பராக்!

ரியான் பராக் ஃபார்முக்கு வருவார், வெற்றி பெற்றுத் தருவார்: விக்ரம் ரத்தோர்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

