இங்கிலாந்தின் முதல்தர கால்பந்து போட்டியான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிக்கு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வாகி கோவென்ட்ரி சிட்டி சாதனை படைத்துள்ளது.
இரண்டாம் டிவிஷன் கால்பந்து போட்டியான இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பை வென்று, பிரீமியர் லீக்கிற்கு தேர்வாகியுள்ளது. கடைசியாக இந்த அணி, 2000-2001 சீசனில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஎஃப்எல் சாம்பியன்ஷிப்பிற்கு மீதம் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் 44 போட்டிகளிலேயே தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.
போர்ட்ஸ்மவுத் அணியுடன் இன்று மோதிய கோவென்ட்ரி சிட்டி 5- 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசியாக 9,113 நாள்களுக்கு முன்னதாக இந்த அணி ஆஸ்டன் வில்லா அணியினால் தோற்கடிக்கப்பட்டது.
அடுத்த 2026-27 பிரீமியர் லீக் சீசனில் கோவென்ட்ரி சிட்டி பங்கேற்கவிருக்கிறது. இதனால், அணியின் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாக கால்பந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Summary
Coventry City earned Premier League return after 25 years.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூன்றாவது டிவிஷனுக்கு தள்ளப்பட்ட முன்னாள் சாம்பியன் லெஸ்டர் சிட்டி..! சோகத்தில் ரசிகர்கள்!

கிளப் உலகக் கோப்பையை வென்ற செல்ஸிக்கு இப்படி ஒரு நிலைமையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

போர் நெருக்கடி; 3 நாள் பேருந்து பயணம்..! 40 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் தேர்வான இராக்!

அரை நூற்றாண்டுக்குப் பின்னர் கால்பந்து உலகக் கோப்பையில் தேர்வான காங்கோ!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


