15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்!

கிளப் உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேறிய அணிகள் குறித்து...

News image

காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகளின் நட்சத்திர வீரர்கள். - படம்: எக்ஸ் / கிளப் உலகக் கோப்பை

Updated On :2 ஜூலை 2025, 11:55 am

கிளப் உலகக் கோப்பை காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுகள் முடிவுக்கு வந்தன.

இந்தச் சுற்றில் தேர்வாகி காலிறுதிக்கு பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக், பால்மெய்ராஸ், செல்ஸி, ஃப்ளுமினென்ஸ், அல்-ஹிலால், ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட்  ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன.

கடைசியாக நடந்த போட்டிகளில் ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தேர்வாகியுள்ளன.

இதில் ரியல் மாட்ரிட் ஜூவெந்தஸ்ஸ் அணியுடன் 1-0 எனவும் டார்ட்மண்ட்  அணி மான்டேரியுடன் 2-1 எனவும் வென்றது.

காலிறுதியில் யார் யாருடன் மோதல்?

1. ஃப்ளுமினென்ஸ், அல்-ஹிலால் போட்டி - ஜூலை 5, நள்ளிரவு 12.30

2. பால்மெய்ராஸ் , செல்ஸி போட்டி - ஜூலை 5, காலை 6.30

3. பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் போட்டி - ஜூலை 5, இரவு 9.30

4. ரியல் மாட்ரிட், டார்ட்மண்ட் போட்டி - ஜூலை 6, நள்ளிரவு 1.30

Summary

Eight teams have been selected for the quarterfinals of the FIFA Club World Cup. This matches begin on July 5th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.