டி20 உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
14 மாத இடைவெளிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய அணியுடன் இணைந்துள்ளனர்.
இதையும் படிக்க: மாலத்தீவு விவகாரம்: வைரலாகும் தோனியின் விடியோ!
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றுள்ளது சிறப்பான முடிவு என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடங்களான அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்களின் தன்மை புரிந்து கொள்வதற்கு சிறிது கடினமாக இருக்கும். இந்திய அணிக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அனுபவம் தேவைப்படுகிறது. விராட் கோலி டி20 போட்டிகளில் 12000 ரன்களை நெருங்கி வருகிறார். ரோஹித் மற்றும் விராட் கோலியின் வருகை அணிக்கு பேட்டிங்கில் வலுசேர்க்கும். அவர்கள் இருவரும் அணியில் இருப்பது இந்திய அணி உலகக் கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்றார்.
இதையும் படிக்க: தீயாக உடற்பயிற்சி செய்யும் ஹார்திக் பாண்டியா!
டி20 உலகக் கோப்பை ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கடின உழைப்புதான் வெற்றியைத் தரும்: திரைப்பட இயக்குநா் எஸ்.பி.முத்துராமன்

தமிழகம் வளா்ச்சி பெற திமுக ஆட்சியை அகற்றுவது அவசியம்: அண்ணாமலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

