குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ள மயங்க் அகர்வால்!
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.


உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திய வீரர் மயங்க் அகர்வால் குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ளார்.
இந்திய அணியின் மயங்க் அகர்வால் கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு ஆபத்துக் கட்டத்தைத் தாண்டிய மயங்க் அகர்வால் தற்போது மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் கர்நாடக அணியை வழிநடத்தவுள்ளார்.
ரஞ்சிக் கோப்பையின் குரூப் சி பிரிவில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் 21 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...