2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

உலக செஸ் சாம்பியன்ஷிப்: 7-வது சுற்றும் டிராவில் முடிந்தது!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 7-வது சுற்று டிராவில் முடிந்தது.

News image
குகேஷ் & லிரேன்
Updated On :3 டிசம்பர் 2024, 3:00 pm

DIN

ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இன்று நடைபெற்ற 7-வது சுற்று டிரா செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.

14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.

மேலும் 4,5,6-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.

இருவரின் மீதும் கடந்த சுற்று டிரா செய்யப்பட்டதைத் தொடர்ந்து சில விமர்சனங்கள் எழுந்தன. ஆட்டத்தில் பிடிப்புடன் இல்லததாக பிரபல செஸ் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற 7-வது சுற்றில் குகேஷ் வெள்ளைக் காய்களில் விளையாடினார். குகேஷ் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக விளையாடி முடிந்தவரை ஆட்டம் டிராவில் முடிப்பதைத் தவிர்த்துக் கொண்டே இருந்தார்.

கருப்புக் காய்களில் ஆடிய லிரேன் தனது நகர்த்தல்களின் மீது அதிருப்தியுற்று வழக்கம்போல தலையில் கைவைத்தார். அவர் இவ்வாறு செய்வது எதிராளியை குழப்பமடையச் செய்வதற்கு எனச் சொல்லப்பட்டாலும் இன்று அவர் அமைதியிழந்தே காணப்பட்டார்.

டிங் லிரென்

டிங் லிரென்

இருவரும் தங்களுக்கு வழங்கப்படும் தலா 2 மணி நேரங்களில் 40 நகர்த்தல்களை முடித்தால் போனஸ் 30 நிமிடங்கள் வழங்கப்படும். இருவருக்கும் அது வழங்கப்பட்டது. ஆனால், அதிலும் டிங் லிரென் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொண்டார்.

இறுதியில் இருவரும் ஆட்டத்தை டிரா செய்தனர். 7 சுற்றுகளின் முடிவில் இருவரும் தலா 3.5 புள்ளிகள் எடுத்துள்ளனர்.

குகேஷ் இந்தமுறை 31% -க்கும் மேலான நேரத்தைக் கண்களை மூடியபடி செலவிட்டதாக விளையாட்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.