சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

புதிய யூடியூப் சேனல் தொடக்கம்: உலக சாதனை படைத்த ரொனால்டோ!

கிறிஸ்டியானோ ரொனால்டோ யூடியூப் சேனல் தொடங்கி புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

News image
கிறிஸ்டியானோ ரொனால்டோ - படங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ / எக்ஸ்
Updated On :22 ஆகஸ்ட் 2024, 7:54 am

DIN

39 வயதாகும் உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டது 2022-லும் நிறைவேறவில்லை.

போர்ச்சுகல் அணிக்காக130 கோல்களும் ஒட்டுமொத்தமாக 897 கோல்களையும் ரொனால்டோ அடித்துள்ளார்.

யுஆர் கிறிஸ்டியோனா என்ற பெயரில் ரொனால்டோ புதியதாக யூடியூப் சேனலை தொடங்கினார். 24 மணி நேரத்திற்குள் 10 மில்லியன் (1 கோடி) சப்ஸ்கிரைபர்களை பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

ஆண்டுக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16ஆயிரம் கோடி ரூபாய்)க்கு ரொனால்டோ வை சௌதியின் கிளப் அணி ஒப்பந்தம் செய்தது. 2025 வரை இந்த அணிக்காக விளையாட உள்ளார் ரொனால்டோ.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் எக்ஸில் 112.5 மில்லியன் ஃபாலோயர்களும் முகநூலில் 170 மில்லியன் ஃபாலோயர்களும் இன்ஸ்டாவில் 636 மில்லியன் ஃபாலோயர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக ஹேம்ஸ்டர் கோம்பட் 7 நாள்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இதை ஒரே நாளில் முறியடித்து ரொனோல்டா புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.