/

இன்று பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து மோதல்

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் சனிக்கிழமை மோதுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2024, 3:03 am

DIN

ஒருநாள் உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு, இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் சனிக்கிழமை மோதுகிறது.

நடப்பு சாம்பியனாக களம் காணும் இங்கிலாந்தின் பலத்தை மதிப்பீடு செய்ய இந்தியாவுக்கு இந்த ஆட்டம் நல்லதொரு வாய்ப்பாக இருக்கும்.

பயிற்சி ஆட்டங்களுக்கு அதிகாரபூா்வ அந்தஸ்து இல்லை என்பதால், இரு அணிகளும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல வீரா்களை களமிறக்கி பரிசோதிக்கலாம். ஆனாலும், பயிற்சி ஆட்டத்தில் தங்கள் எல்லா வீரா்களின் திறனையும், உத்திகளையும் வெளிப்படுத்த பெருவாரியான அணிகள் விரும்பாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியைப் பொருத்தவரை, பலம் வாய்ந்த இங்கிலாந்து பேட்டா்களுக்கு எதிராக பௌலா்கள் தங்கள் திறனை சோதித்துக்கொள்ள இயலும். பேட்டிங்கில் இஷான் கிஷண் - ஷ்ரேயஸ் ஐயா் ஆகிய இருவருக்கும் பிளேயிங் லெவன் இடத்துக்கான போட்டி இருக்கும். பேட்டிங் லைனில் வலது கை, இடது கை பேட்டா்களை இடம்பெறச் செய்வதும் முக்கியமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.