பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!தமிழகம் காக்க போராடிய தலைவர்! ஜெயலலிதாவுக்கு இபிஎஸ் புகழஞ்சலி!வெள்ளி கிலோவுக்கு ரூ. 10,000 குறைவு! தங்கம் விலை உயர்வு!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு! சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து! 2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்பு
/

ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்திய முகமது ஷமி!

ஒருநாள் போட்டிகளில்  இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியவர் என்ற பெருமையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 1:18 pm

DIN

ஒருநாள் போட்டிகளில்  இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விக்கெட்டை அதிக முறை வீழ்த்தியவர் என்ற பெருமையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பெற்றுள்ளார்.

உலகக் கோப்பையில் லக்னௌவில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இங்கிலாந்து வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி மற்றும் அடில் ரஷீத் ஆகியோரின் விக்கெட்டைக் கைப்பற்றி  அசத்தினார் முகமது ஷமி. 

முகமது ஷமியின் பந்துவீச்சுக்கு பலியாகும் பட்லர்

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை முகமது ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஜோஸ் பட்லரின் விக்கெட்டை முகமது ஷமி 5 முறை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில்  இதற்கு முன்னதாக இத்தனை முறை ஜோஸ் பட்லரின் விக்கெட்டை எந்த ஒரு பந்துவீச்சாளரும் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.