திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

2-வது அரையிறுதி நடக்குமா? கொல்கத்தாவில் மழை!

கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

News image
கொல்கத்தாவில் மழை
Updated On :2 பிப்ரவரி 2024, 3:21 am

DIN

கொல்கத்தாவில் மழை பெய்து வருவதால் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஒருநாள் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மும்பையில் புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றது.

இந்த நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி நடைபெறவுள்ள ஈடன் கார்டன் மைதானப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், மழை நிற்காமல் தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் இரண்டாவது அரையிறுதிப் போட்டி வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்படும்.

இரண்டாவது அரையிறுதியில் வெற்றிபெறும் அணி, அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.