தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

உலகக் கோப்பையில் மிட்செல் ஸ்டார்க் சாதனையை சமன் செய்த முகமது ஷமி!

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சமன் செய்தார்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:16 am

DIN

உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி சமன் செய்தார்.

உலகக் கோப்பையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முகமது ஷமி அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி வெறும் 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்த உலகக் கோப்பையில் முகமது ஷமியின் இரண்டாவது 5  விக்கெட்டுகள் இதுவாகும். மொத்தமாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் 3-முறை 5 விக்கெட்டுகளை ஷமி வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முகமது ஷமி சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.