ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தாயகம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் தோல்வியை சந்தித்தாலும், தொடர் வெற்றியின் மூலம் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஆஸ்திரேலியா அணி விளையாடிய 6 போட்டிகளில் 4-இல் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்திட்ட உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், தனது சொந்த காரணங்களுக்காக தாயகம் செல்கிறார் என்றும், இங்கிலாந்துக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் விளையாட மாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இன்று இலங்கையை சந்திக்கிறது இந்தியா
மேலும், அவரின் பயணக் காலம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
மார்ஷ் மீண்டும் அணியில் இணைவாரா அல்லது அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படுவாரா என்பதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

