ஷுப்மன் கில் குறித்து விராட் கோலி கூறியதாவது: எனக்கு தெரிந்தது என்னவென்றால், என்னுடைய கிரிக்கெட் பயணத்தை பார்த்து வளர்ந்ததாக கில் கூறியிருக்கிறார். அவர் என்னிடம் கிரிக்கெட் குறித்து அதிகம் பேசுவார். அவருக்கு உதவுவதற்கு நான் ஆர்வமாக உள்ளேன். கிங் மற்றும் பிரின்ஸ் போன்ற பட்டங்கள் வைத்து அழைப்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், ஒரு மூத்த கிரிக்கெட் வீரர் இளம் வீரர்கள் அவர்களது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள உதவியாக இருக்க வேண்டும். மூத்த வீரர்கள் தங்களுக்கு இத்தனை ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம், இளம் வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சந்திக்கும் ஏற்ற இறக்கங்களை திறம்பட கையாள முடியும். ஷுப்மன் கில் ஒரு சிறந்த இளம் வீரர். அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனை அவர் தொடர்ந்து செய்ய வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என்றார்.