தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரஞ்சி கோப்பையில் இந்த மாற்றம் தேவை: ரஹானே கோரிக்கை

நான்கு நாள் ஆட்டங்களில் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் உங்களுக்கு முடிவுகள் கிடைக்காது.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 6:21 am

DIN

ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ஐந்து நாள்களுக்கு நடைபெற வேண்டும் என மும்பை அணியின் கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.

2022-23 ரஞ்சி கோப்பைப் போட்டியில் நாக் அவுட்  சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரஹானே தலைமையிலான மும்பை அணி. மஹாராஷ்டிரா அணிக்கு எதிரான மும்பையின் ரஞ்சி ஆட்டம் டிரா ஆனது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம அளவில் ரன்கள் எடுத்தன. இதனால் நாக் அவுட் சுற்றுக்கு மும்பை அணியால் தகுதி பெற முடியாமல் போனது. மும்பை அணியின் வெற்றிக்கு 28 ஓவர்களில் 253 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 58 ரன்கள் குறைவாக எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது. இதையடுத்து ரஞ்சி கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஐந்து நாள்களுக்கு நடைபெற வேண்டும் என ரஹானே தெரிவித்துள்ளார். தற்போது ரஞ்சி கோப்பையில் நாக் அவுட் ஆட்டங்கள் மட்டுமே ஐந்து நாள்களுக்கு நடைபெறுகின்றன. இதுபற்றி ரஹானே கூறியதாவது:

முதல்தர கிரிக்கெட் ஆட்டங்கள் ஐந்து நாள்களுக்கு நடக்கலாம். டெஸ்ட் ஆட்டங்களை ஐந்து நாள்களுக்கு விளையாடுகிறோம். இதனால் முடிவு உறுதியாகிறது. ஐந்து நாள்களுக்கு ஆட்டம் நடைபெற்றால் இன்னும் அதிகமான முடிவுகள் கிடைக்கும். நான்கு நாள் ஆட்டங்களில் பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் உங்களுக்கு முடிவுகள் கிடைக்காது. சவாலாக இருக்கும். ஐந்து நாள்களில் முடிவுகள் அடிக்கடிக் கிடைக்கும். இது அட்டவணைக்கு எப்படிச் சரிவரும் எனத் தெரியவில்லை. நான்கு நாள் ஆட்டங்களில் ஒருநாளில் ஒரு பகுதியை நன்கு விளையாடிவிட்டால் டிராவை எட்டிவிடலாம். ஒவ்வொரு பகுதியாக எப்படி நிலைத்து நின்று பேட்டிங் செய்வது, பந்துவீச்சில் தொடர்ந்து ஒரேமாதிரியாக வீசுவது போன்றவை எல்லாம் ஐந்து நாள் கிரிக்கெட்டில் சரியாகக் கற்றுக்கொள்ளலாம். எனவே ரஞ்சி கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களும் ஐந்து நாள்களுக்கு நடைபெறால் நன்றாக இருக்கும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.