தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஏழு விக்கெட்டுகள் எடுத்த ஜடேஜா: 133 ரன்களுக்குச் சுருண்ட தமிழ்நாடு அணி!

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

DIN

தமிழ்நாடு அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் ஆல்ரவுண்டர் ஜடேஜா.

தமிழ்நாடு - செளராஷ்டிர அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செவ்வாயன்று தொடங்கியது. செளராஷ்டிர அணியின் கேப்டனாக ஜடேஜா செயல்படுகிறார்.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 142.4 ஓவர்களில் 324 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திரஜித் 66, விஜய் சங்கர் 53, ஷாருக் கான் 50 ரன்கள் எடுத்தார்கள். காயத்திலிருந்து மீண்டு வந்து முதல்தர கிரிக்கெட்டில் விளையாடும் ஜடேஜா, 24 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். யுவ்ராஜ்சிங் 4, டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

3-ம் நாளான இன்று செளராஷ்டிர அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 6-ம் நிலை வீரராகக் களமிறங்கிய ஜடேஜா, 15 ரன்களுக்கு அபரஜித் பந்தில் ஆட்டமிழந்தார். தமிழக அணியின் எம். சித்தார்த், அஜித் ராம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 132 ரன்கள் முன்னிலை பெற்றது. 

தமிழ்நாடு அணி 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் சுழலில் 36.1 ஓவர்களில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாய் சுதர்சன் அதிகபட்சமாக 37 ரன்கள் எடுத்தார். ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசி 171. ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். டிஏ ஜடேஜா 3 விக்கெட்டுகளை எடுத்தார். 

சென்னையில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தை வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 266 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த அணி, 3-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளில் வெற்றி பெற செளராஷ்டிர அணிக்கு 262 ரன்கள் தேவைப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.