நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகள்: பிசிசிஐ

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:36 pm

DIN

இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மும்பையில் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் இன்று (ஜனவரி 1)  நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற பல்வேறு கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற வேண்டுமானல் ரஞ்சி, சயீத் முஸ்தாக் அலி, துலிப் கோப்பை போட்டிகளில் அதிகம் விளையாடியிருக்க வேண்டும்; யோ-யோ உள்ளிட்ட பயிற்சி தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் போன்ற புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதேபோல, உலகக் கோப்பையில் இடம் பிடித்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் இந்திய வீரர்களை கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு நாள் உலகக் கோப்பை போட்டிக்கான 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.