அந்த நேர்காணலில் அவர் பேசியதாவது: 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை மீண்டும் அணிய உள்ளேன். நான் மிகுந்த ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். இந்தப் பயணத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்துள்ளேன். மீண்டுன் அணியின் ஜெர்சியை அணிவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் 5 மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லையென்றால் உங்களது மனநிலை எப்போது மீண்டும் அணிக்காக விளையாடப் போகிறோம் என்ற கவலையில் இருக்கும். நான் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்காக ஆர்வமாக காத்திருந்தேன்.