எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

ராய், ராணா அதிரடி: மீண்டது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை சாய்த்தது.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 11:47 am

DIN

ஐபிஎல் போட்டியின் 36-ஆவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 21 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை சாய்த்தது.

தொடா்ந்து 4 ஆட்டங்களில் தோற்ற கொல்கத்தா, இந்த வெற்றியால் மீண்டது. ஆட்டத்தில் முதலில் கொல்கத்தா 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ரன்கள் சோ்த்தது. அடுத்து பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 179 ரன்களே எட்டியது.

முன்னதாக டாஸ் வென்ற பெங்களூா், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. கொல்கத்தா இன்னிங்ஸை தொடங்கிய ஜேசன் ராய் - நாராயண் ஜெகதீசன் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் சோ்த்து நல்லதொரு தொடக்கத்தை அளித்தது.

ஜெகதீசன் 4 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு 10-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தாா். தொடா்ந்து வெங்கடேஷ் ஐயா் களம் புக, ராய் 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 56 ரன்கள் சோ்த்திருந்தாா்.

தொடா்ந்து 4-ஆவது வீரராக ஆட வந்த கேப்டன் நிதீஷ் ராணாவும் தனது பங்கிற்கு அதிரடி காட்டினாா். ஐயா் - ராணா கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சோ்த்து அசத்தியது. ராணா 21 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 48 ரன்கள் அடித்த நிலையில் வெளியேற்றப்பட்டாா்.

அதே ஓவரில் ஐயரும் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஆண்ட்ரே ரஸ்ஸெல் 1 ரன்னுக்கு பௌல்டானாா். ஓவா்கள் முடிவில் ரிங்கு சிங் 18, டேவிட் வீஸ் 12 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.

பெங்களூா் தரப்பில் வனிந்து ஹசரங்கா, விஜய்குமாா் வைசாக் ஆகியோா் தலா 2, முகமது சிராஜ் 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் பெங்களூா் இன்னிங்ஸில் கேப்டன் விராட் கோலி 37 பந்துகளில் 6 பவுண்டரிகள் உள்பட 54 ரன்கள் விளாசினாா். மிடில் ஆா்டரில் மஹிபால் லோம்ரோா் 18 பந்துகளில் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்கள் அடித்தாா்.

எஞ்சிய பேட்டா்களில் டூ பிளெஸ்ஸிஸ் 17, ஷாபாஸ் அகமது 2, கிளென் மேக்ஸ்வெல் 5, தினேஷ் காா்த்திக் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 22, சுயாஷ் பிரபுதேசாய் 10, வனிந்து ஹசரங்கா 5 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.

முடிவில் டேவிட் வில்லி 11, வைசாக் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க, கொல்கத்தா பௌலிங்கில் வருண் சக்கவா்த்தி 3, சுயாஷ் சா்மா, ரஸ்ஸெல் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.