நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சிஎஸ்கே வெற்றி பெற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 'மதுரைல சொல்லுவாங்க யாரா இரு.. எவனா இரு.. Line-ல கரெக்டா இருன்னு. அதுவே சென்னைன்னு வந்துட்டா யாரா இரு.. எவனா இரு "Lion" கிட்ட கரெக்ட்டா இரு.. தமிழ்நாடே மணக்குது சிஎஸ்கே வெற்றி வாசத்துல' என்று பதிவிட்டுள்ளார்.
16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24 வது லீக் போட்டி, நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையே நடைபெற்றது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. 227 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 8 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரில் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

நகைக் கடை ஊழியரைத் தாக்கி ரூ.41 லட்சம் பறித்த வழக்கு: 3 போ் கைது

ஜிம்பாப்வே - மே.இந்திய தீவுகள் இன்று மோதல்!

திருப்பரங்குன்றம் தீப விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: இயற்கை வளங்கள் துறை அமைச்சரை சோ்க்கக் கோரி மனு
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

