மூன்று தொடர்களில் இந்திய அணியில் இடம்பிடித்த ராகுல் திரிபாதிக்கு இதுவரை ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
2012 முதல் மஹாராஷ்டிர ரஞ்சி அணியில் விளையாடி வரும் ராகுல் திரிபாதி ஐபிஎல் போட்டியில் அதிரடியாக விளையாடுபவராக அறியப்படுகிறார். ஐபிஎல் 2022 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 413 ரன்கள் எடுத்துக் கவனம் பெற்றார். ஸ்டிரைக் ரேட் - 158.23. நடு ஓவர்களில் அதிரடியாக விளையாடுவதால் இவரை இந்திய அணியில் விரைவில் சேர்க்க வேண்டும் என ரவி சாஸ்திரி முதற்கொண்டு குரல் கொடுத்தார்கள். கடந்த ஜூன் மாதம் ஐயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு முதலில் தேர்வானார் திரிபாதி. ஆனால் அந்தத் தொடரில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன்பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருக்குத் தேர்வானார் திரிபாதி. ஜிம்பாப்வேயிலும் விளையாட திரிபாதிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதற்கடுத்து தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும் தேர்வான திரிபாதிக்கு இந்தமுறையும் அதே நிலைமை தான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
ஒருநாள் தொடர் 1-1 என சமனில் உள்ளதால் தொடரை வெல்வதற்காக இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வாய்ப்பின்றி ஏமாற்றப்பட்டுள்ளார் திரிபாதி.

அதேசமயம் இந்திய அணி நிர்வாகத்தையும் குறை கூற முடியாது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கடைசியாக வந்து இணைந்தவர் தான் திரிபாதி. அவருக்கு முன்பு தேர்வான அனைவருமே நன்றாக விளையாடி வருகிறார்கள். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், ஷுப்மன் கில் என அனைவருமே கிடைத்த வாய்ப்புகளில் திறமையை நன்கு வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்களில் யாரை வெளியேற்றி திரிபாதியை அணியில் சேர்க்க முடியும்? இந்தத் தொடரில் மட்டும் தான் ஷுப்மன் கில் சரியாக விளையாடவில்லை. அதற்கு முன்பு அபாரமாக விளையாடியதால் அவரையும் வெளியேற்ற முடியாது.
திரிபாதிக்கு ஏற்கெனவே 31 வயதாகி விட்டது. அவருக்கு விரைவில் நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய சூழலில், அணியில் நிலவும் கடுமையான போட்டியில் இந்திய அணியின் தொப்பியை எப்போது அணியப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! மாவட்டவாரியாக விவரம்...

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


