சாம்பியன்ஸ் லீக் இறுதிப் ஆட்டம்:ரஷ்யாவில் இருந்து மாற்றம்
உக்ரைன் மீது போா் எதிரொலியாக ஐரோப்பிய கண்டத்தின் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷியாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு விட்டதாக யுஇஎஃப்ஏ அறிவித்துள்ளது.


உக்ரைன் மீது போா் எதிரொலியாக ஐரோப்பிய கண்டத்தின் பெரிய கால்பந்து திருவிழாவான சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் ரஷியாவில் இருந்து பாரிஸ் நகருக்கு மாற்றப்பட்டு விட்டதாக யுஇஎஃப்ஏ அறிவித்துள்ளது.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு (யுஇஎஃப்ஏ) சாா்பில் பிரபல கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் நிகழாண்டு சாம்பியன்ஸ் லீக் 2022 இறுதி ஆட்டம் ரஷியாவின் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் வரும் மே 28-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே உக்ரைன் மீது ரஷிய ராணுவம் போா் தொடுத்த நிலையில், சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டம் அங்கு நடத்தப்படாது. அதற்கு பதிலாக பாரிஸ் நகரில் மே 28-இல் நடைபெறும் என யுஇஎஃப்ஏ அறிவித்தது. மேலும் ரஷிய-உக்ரைன் அணிகள் தங்கள் ஆட்டங்கள் நடுநிலையான மைதானங்களில் ஆட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இதற்கு ரஷிய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...