இந்திய அணியின் ரவிச்சந்தின் அஸ்வின் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் எடுத்த 6-வது வீரர் என்ற புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.
இதையும் படிக்க: தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஷ்மீர் இஸ்லாமியர்கள்!
இதற்கு முன்னதாக கபில் தேவ், ஷான் பொல்லாக், ஸ்டூவர்ட் பிராட், ஷேன் வார்னே மற்றும் சர் ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய 5 கிரிக்கெட் வீரர்களும் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். அந்த வரிசையில் 6-வது வீரராக தமிழக வீரர் அஸ்வின் இணைந்துள்ளார்.
இந்த சாதனையை அவர் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளின்போது படைத்தார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் குறுகிய காலத்தில் 450 விக்கெட்டுகளைக் கடந்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளார். தற்போது அவர் டெஸ்ட் போட்டிகளில் 447 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: இரும்புப் பெண் சமந்தா: நடிகரின் அன்புப் பரிசு!
இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். அவர் இந்த சாதனையை தான் விளையாடிய 93-வது டெஸ்ட் போட்டியில் படைத்திருந்தார்.
அனில் கும்ப்ளேவின் இந்த சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 450 விக்கெட்டுகளை எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்க அஸ்வினுக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே தேவைப்படுகின்றன.
வங்கதேசத்துக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டி அவரது 88-வது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

