/

ஹைதராபாத்துக்கு ஆட்டம் காட்டிய லக்னெள

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:53 am

DIN

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்-இன் இன்றைய (திங்கள்கிழமை) ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

லக்னௌ தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கேஎல் ராகுல், குயின்டன் டி காக் களமிறங்கினர். பவர் பிளே முடிவதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து லக்னௌ தத்தளித்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னௌ அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா கேன் வில்லியம்சன் நம்பிக்கை தரவில்லை. அபிஷேக் சர்மா 13 ரன்களுக்கும், வில்லியம்சன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 5 பவுண்டரிகள், ஒரு சிக்சர் என அதிரடி காட்டினார்.

30 பந்துகளுக்கு 44 ரன்கள் எடுத்த ராகுல் ரவி பிஸ்னோய் கேட்சில் ஆட்டமிழந்தார். அதற்குப் பிறகு களமிறங்கிய வீரர்களில் நிக்கோலஸ் போரன் தவிர வேறு யாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 157 ரன்களுக்கு ஹைதராபாத் அணி தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.