ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

இங்கிலாந்து தொடர்: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

அவருடன் தொடர்பில் இருந்த விக்கெட் கீப்பர் சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

News image
Updated On :15 ஜூலை 2021, 12:02 pm

இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியைச் சேர்ந்த மேலும் ஒருவர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 4 முதல் தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய வீரர்கள் டர்ஹமில் பயிற்சியைத் தொடங்குகிறார்கள். ஜூலை 20 முதல் தொடங்கும் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். 

இங்கிலாந்தில் உள்ள இந்திய வீரர்களில் இருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வீரருக்குச் சமீபத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார் ரிஷப் பந்த். இதையடுத்து கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ரிஷப் பந்த், கடந்த ஒரு வாரமாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருக்கு கரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாததால் விரைவில் மீண்டு வந்து இந்திய அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவார் என அறியப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட வீரரின் பெயர் பற்றி பிசிசிஐ இதுவரை தகவல் தெரிவிக்கவில்லை. இந்திய வீரர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவில் உள்ள த்ரோடவுன் நிபுணர் தயானந்த கரானி, கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இதையடுத்து தயானந்த கரானியுடன் தொடர்பில் இருந்த விக்கெட் கீப்பர் சஹாவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.