தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஷாருக் கான், கெளசிக் அபார பேட்டிங்: விஜய் ஹசாரே போட்டியில் தமிழக அணி வெற்றி!

ஷாருக் கான், சாய் கிஷோர், முகமது ஆகியோர் தலா 3 சிக்ஸர்களும் கெளசிக் 2 சிக்ஸர்களும்...

News image
கேப்டன் தினேஷ் கார்த்திக்
Updated On :27 ஜனவரி 2024, 7:37 pm

DIN

விஜய் ஹசாரே போட்டியில் ஜார்க்கண்ட் அணியை தமிழக அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

இந்தூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஒருகட்டத்தில் 131 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் கீழ் நடு வரிசை வீரர்கள் அபாரமாக விளையாடினார்கள். தொடக்க வீரர் பாபா அபராஜித் 57 ரன்களும் ஷாருக் கான் 51 ரன்களும் ஜே. கெளசிக் 55 ரன்களும் சாய் கிஷோர் 29 ரன்களும் முகமது 20 ரன்களும் எடுத்தார்கள். ஷாருக் கான், சாய் கிஷோர், முகமது ஆகியோர் தலா 3 சிக்ஸர்களும் கெளசிக் 2 சிக்ஸர்களும் அடித்து கடைசிக் கட்டத்தில் அதிக ரன்கள் எடுக்க உதவினார்கள். இதனால் தமிழக அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. 

இதன்பிறகு விளையாடிய ஜார்க்கண்ட் அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. தமிழக அணித் தரப்பில் எம். சித்தார்த் 3 விக்கெட்டுகளும் பாபா அபராஜித், ரகுபதி சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளும் முகமது, சாய் கிஷோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.