ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்றில் விளையாடி ஆறு அணிகள் டி20 உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன.
கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஒராண்டுக்கு ஒத்திவைக்கப்படுவதாக சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, ஜப்பான் போட்டி அமைப்புக் குழு அதிகாரப்பூா்வமாக சமீபத்தில் அறிவித்தது. வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. விளையாட்டு வீரா்கள், அதிகாரிகள், போட்டி தொடா்புடையவா்கள், சா்வதேச சமூகத்தின் உடல்நலனை பாதுகாக்க ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டி திட்டமிட்டபடி அதே தேதிகளில் நடைபெறுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
நேற்று, ஐசிசி உறுப்பினர்களுக்கான கூட்டம் டெலிகான்பரன்ஸ் முறையில் நடைபெற்றது. இதில் டி20 உலகக் கோப்பை குறித்து விவாதிக்கப்பட்டது. டி20 உலகக் கோப்பைப் போட்டி அக்டோபர் மாதம் தான் தொடங்குவதால் தற்போதைய நிலையில் போட்டியை ஒத்திவைப்பதற்கான முடிவு எதுவும் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை. அக்டோபருக்குள் கரோனாவின் பாதிப்புகள் குறைந்துவிடும் என்பதால் திட்டமிட்டபடி அதே தேதிகளில் டி20 உலகக் கோப்பையை நடத்தவே ஐசிசி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்குபெறும் 16 அணிகள்
1. பாகிஸ்தான்
2. இங்கிலாந்து
3. தென் ஆப்பிரிக்கா
4. ஆஸ்திரேலியா
5. இந்தியா
6. நியூஸிலாந்து
7. இலங்கை
8. ஆப்கானிஸ்தான்
9. வங்கதேசம்
10. மேற்கிந்தியத் தீவுகள்
11. பப்புவா நியூ கினி
12. அயர்லாந்து
13. நெதர்லாந்து
14. நமிபியா
15. ஸ்காட்லாந்து
16. ஓமன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


