/

பிரபல கிரிக்கெட் வீரருக்குத் திருமண நிச்சயதார்த்தம்! (படங்கள்)

உனாட்கட்டுக்கு புஜாரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:12 pm

எழில்

இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20களிலும் ஐபிஎல் போட்டியில் 73 ஆட்டங்களிலும் விளையாடியுள்ள 28 வயது இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட், விரைவில் திருமணம் செய்யவுள்ளார். 

உனாட்கட் தலைமையிலான செளராஷ்டிரம் அணி, சமீபத்தில் ரஞ்சி கோப்பையை வென்றது. இந்நிலையில் ரின்னியுடனான திருமணம் நிச்சயதார்த்தம் குறித்த தகவலையும் அதன் புகைப்படத்தையும் உனாட்கட் வெளியிட்டுள்ளார்.

உனாட்கட்டுக்கு புஜாரா உள்ளிட்ட பிரபல வீரர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.