கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் இதர கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் ரத்து செய்யப்படுகின்றன. இதையடுத்து ஐபிஎல் போட்டியும் இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. வீரா்கள், ரசிகா்கள் ஆகியோரின் நலன் கருதி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினருக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி வரை விசாக்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கும் குறைந்தது ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளது. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15-க்குப் பிறகு தொடங்காமல் போனால் கிரிக்கெட் வீரர்களின் விடுமுறைக் காலம் மேலும் அதிகமாகும் எனத் தெரிகிறது. இதனால் சர்வதேச கிரிக்கெட் தொடர்கள், ஐபிஎல் போட்டி என அடுத்த ஒரு மாதத்துக்கு உள்ளூர், சர்வதேச ஆட்டங்கள் எதுவும் நடைபெறாது. கிரிக்கெட் ஆட்டங்களையும் கிரிக்கெட் வீரர்களையும் கண்டுகளிக்க கிரிக்கெட் ரசிகர்கள் குறைந்தது ஒரு மாதமாவது காத்திருக்கவேண்டிய நிலைமை தற்போது உள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் பாதிப்பு ஆளாகியுள்ள கிரிக்கெட் தொடர்கள்:
1. ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது
2. இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு
3. இங்கிலாந்து - இலங்கை டெஸ்ட் தொடர் ஒத்திவைப்பு
4. ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு
5. உலக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
6. ரசிகர்கள் இல்லாமல் பாகிஸ்தானில் பிஎஸ்எல் டி20 போட்டி நடத்தப்படும். மார்ச் 18-ல் முடிவடையும். போட்டியிலிருந்து விலகும் வெளிநாட்டு வீரர்களுக்கு அனுமதி.
7. ஆஸ்திரேலிய மகளிர் அணியின் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
8. வங்கதேசத்தில் நடைபெற இருந்த ஆசியா லெவன், உலக லெவன் அணிகள் மோதும் டி20 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.1,40,000 சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி மேலாளர் வேலை: உடனே விண்ணப்பிக்கவும்!

வார பலன்கள் (ஏப். 24 - 30) - ரிஷபம்

வார பலன்கள் (ஏப். 24 - 30) - மேஷம்

என்ன, கரூர் சென்று செந்தில் பாலாஜி வாக்களிக்கவில்லையா? ஏன்??
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


