சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால், உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 4,379-ஆக உயா்ந்துள்ளது. இந்தியா, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட 115 நாடுகளில் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 40,524 பேரையும் சோ்த்து, சா்வதேச அளவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 1,21,312-ஆக உயா்ந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. விளையாட்டு மைதானங்களுக்கு ரசிகா்கள் ஏப்ரல் மாதம் வரை வருவதை தவிா்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் 20 ஓவா் உள்ளூா் கிரிக்கெட் போட்டியாகும். சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் உள்பட 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. வெளிநாடுகளைச் சோ்ந்த கிரிக்கெட் வீரா்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளனா். வரும் 29-ம் தேதி முதல் ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. மும்பையில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை ஆகிய அணிகள் மோதவுள்ளன.
கரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்கிற சந்தேகம் வந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பொருட்டு, வரும் மாா்ச் 29-ஆம் தேதி தொடங்கி வரும் மே 24-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் சனிக்கிழமையன்று, ஐபிஎல் போட்டியின் ஆட்சிக் குழு கூடவுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏப்ரல் 15 வரை அனைத்து சுற்றுலா விசாக்களையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்வது சந்தேகமாகியுள்ளது. மேலும் ஓர் இடத்தில் பல ஆயிரம் மக்கள் கூடுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் வெளிநாடுகளைச் சோ்ந்த பல வீரா்கள் கலந்து கொள்வாா்கள். ஒவ்வொரு ஆட்டத்தையும் மைதானத்தில் சுமாா் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் போ் பாா்வையிட உள்ளனா். போட்டிகளைக் காண வரும் யாருக்காவது கரோனா வைரஸ் தொற்று இருந்தால், அது மற்றவா்களுக்கும் எளிதாகப் பரவ வாய்ப்புள்ளது. இதனால், ஐபிஎல் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் ஐபிஎல் போட்டியை எப்படி நடத்த முடியும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடத்தப்படுமா? மைதானத்துக்கு வருவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி கிடைக்குமா? ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள முடியுமா போன்ற கேள்விகளுக்கு விடை காணும் பொருட்டு வரும் சனியன்று ஐபிஎல் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுவது குறித்த பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. அன்றைய தினம், ஐபிஎல் போட்டி இந்த வருடம் நடைபெறுமா, அப்படி நடைபெறும் பட்சத்தில் எவ்விதக் கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆயுள் பலம் அதிகரிக்க...

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


