நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கங்குலி பிறந்த நாள்: குவியும் வாழ்த்துகள்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி, இன்று தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி, இன்று தனது 48-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார்.

இதையடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் கங்குலிக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

சச்சின் ட்விட்டரில் கூறியதாவது: பிறந்த நாள் வாழ்த்துகள் தாதா. ஆடுகளத்தில் இருந்த நம்முடைய வெற்றிகரமான கூட்டணி, தற்போது வெளியேயும் தொடர விருப்பம். சிறப்பான வருடம் அமைய வாழ்த்துகள் என்றார்.

கங்குலியின் சாதனைகளை வெளியிட்டு ஐசிசி வாழ்த்து தெரிவித்துள்ளது. 10,000 ஒருநாள் ரன்களை வேகமாக எடுத்த 3-வது வீரர், ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் தனி நபராக அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், 2003 உலகக் கோப்பைப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தவர், 28 வெளிநாட்டு டெஸ்டுகளில் இவர் தலைமையில் இந்திய அணி 11 வெற்றிகளைக் கண்டது... இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலிக்கு வாழ்த்துகள் என்று ஐசிசி வாழ்த்தியுள்ளது.

விராட் கோலி, விவிஎஸ் லக்‌ஷ்மண், முகமது கயிப், ஆகாஷ் சோப்ரா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட பல வீரர்கள் கங்குலிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.a

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.