புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி: பயிற்சியாளர் தகவல்

எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. ஆனால்

News image
Updated On :18 ஜனவரி 2020, 6:02 am

மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் அணியினருடன் பயிற்சியில் இணைந்துள்ளார் தோனி. அவர் பயிற்சியில் ஈடுபடும் விதம் குறித்து ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் கூறியதாவது:

பல மாதங்களாக பயிற்சியில் ஈடுபடாவிட்டாலும் அவருடைய பேட்டிங்கில் துளி தடுமாற்றமும் தென்படவில்லை. கடைசியாக நாங்கள் பேசியபோது, ஜனவரியில் பயிற்சியை ஆரம்பிப்பேன் என்றார். சொன்னதுபோலவே ஆரம்பித்துவிட்டார். ஒரு ஜார்கண்ட் கிரிக்கெட் வீரர் எப்படிப் பயிற்சியில் ஈடுபடுவாரோ அதேபோல முனைப்புடன் செயல்பட்டார் தோனி. பேட்டிங் பயிற்சி அருமையாக அமைந்தது. பந்துகள் அழகாக அவருடைய பேட்டின் நடுப்பகுதியில் பட்டுப் பறந்தன. எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. ஆனால் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி. ஞாயிறு முதல் ஜார்கண்ட் அணி ரஞ்சிப் போட்டியில் விளையாடினாலும் தோனி தன்னுடைய பயிற்சியைத் தொடர்வார். பந்துவீச்சாளர்களிடம் நிறைய பேசி அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.