தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

யு-19 உலகக் கோப்பை: இந்திய அணி விளையாடும் ஆட்டங்களின் விவரங்கள்!

தென் ஆப்பிரிக்காவில் நேற்று முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :18 ஜனவரி 2020, 7:39 am

தென் ஆப்பிரிக்காவில் நேற்று முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பைப் போட்டி தொடங்கியுள்ளது. 

பிரியம் கர்க் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமெடுத்த மும்பையைச் சேர்ந்த 17 வயது யாஷவி ஜைஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை இலங்கை அணிக்கு எதிராக நாளை விளையாடவுள்ளது. 

இதற்கு முன்பாக 2000, 2008, 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்தியா யு-19 உலக சாம்பியன் ஆகியுள்ளது. 2018-ல் நடைபெற்ற உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, சாம்பியன் பட்டத்தை வென்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 13-வது யு-19 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள அணிகளில் இந்திய அணி, குரூப் ஏ-வில் ஜப்பான், நியூஸிலாந்து, இலங்கை ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. நான்கு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும். 

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள்:

ஜனவரி 19: இந்தியா vs இலங்கை
ஜனவரி 21: இந்தியா vs ஜப்பான்
ஜனவரி 24: இந்தியா vs நியூஸிலாந்து
ஜனவரி 28 முதல் 31 வரை காலிறுதிச்சுற்று ஆட்டங்கள்
பிப்ரவரி 4, 6 - அரையிறுதிச்சுற்று ஆட்டங்கள்
பிப்ரவரி 9: இறுதிச்சுற்று ஆட்டம்

(அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகின்றன.)

இந்திய யு-19 அணி:

பிரியம் கர்க் (கேப்டன், உத்தர பிரதேசம்), துருவ் சந்த் ஜுரெல் (துணை கேப்டன், உத்தர பிரதேசம்), யாஷ்வி ஜைஸ்வால் (மும்பை), திலக் வர்மா (ஹைதராபாத்), திவ்யான்ஷ் சக்‌ஷேனா (மும்பை), ஷஷ்வத் ராவத் (பரோடா), திவ்யான்ஷ் ஜோஷி (மிஸோரம்), ஷுபாங் ஹெக்டே (கர்நாடகா), ரவி பிஷ்னாய் (ராஜஸ்தான்), ஆகாஷ் சிங் (ராஜஸ்தான்), கார்த்தி தியாகி (உத்தர பிரதேசம்), அதர்வா அன்கோல்கர் (மும்பை), குமார் குஷாக்ரா (ஜார்கண்ட்), ஷுஷாந்த் மிஸ்ரா (ஜார்கண்ட்), வித்யாதர் பாட்டீல் (கர்நாடகா).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.