புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

96 ரன்களில் ஆட்டமிழந்தார் ஷிகர் தவன்: இந்திய அணி 30 ஓவர்களில் 187/2

இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2020, 10:29 am

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. 2-வது ஒருநாள் ஆட்டம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி மீண்டும் முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் இரு மாற்றங்கள். ரிஷப் பந்துக்குப் பதிலாக மணிஷ் பாண்டேவும் ஷர்துல் தாக்குருக்குப் பதிலாக நவ்தீப் சைனியும் தேர்வாகியுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

ஆரம்பத்தில் விக்கெட்டுகள் விழக்கூடாது என்று வழக்கம்போல ரோஹித் சர்மாவும் ஷிகர் தவனும் கவனமாக விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்தது இந்திய அணி. இருவருமே நிதானமாக, கவனமாக விளையாடினார்கள். 

6 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா, ஸாம்பா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆகி ஆட்டமிழந்தார். அதை மேல்முறையீடு செய்து ஒரு ரெவ்யூவை வீணடித்தார் ரோஹித் சர்மா.  

கோலியுடன் இணைந்து நன்கு விளையாடினார் ஷிகர் தவன். 60 பந்துகளில் அரை சதமெடுத்தார். ஆட்டமிழப்பதற்கு முன்பு 5 ஓவர்கள் இடைவெளியில் 6 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடித்தார் தவன். சதத்தை நெருங்கியபோது ஃபைன் லெக்கில் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். தவன் - கோலி ஜோடி 103 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 30 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 37 ரன்களுடனும் ஷ்ரேயஸ் ஐயர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.